search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராட்டுச் சான்றிதழ்"

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பாக 4 பேர்களுக்கு தலா ரூ. 9,050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 2 பேருக்கு பராமரிப்புக்கான பாதுகாவலர் நியமனச் சான்றுகளையும் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    மேலும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெ க்டர் வழங்கினார். மேலும் திருநங்கை களுக்கான பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

    இதே போல் தமிழ் வளர்ச்சி த்துறையின் சார்பில் ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    • பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
    • 6 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் பொதுமக்கள் சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். இதில் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, வருவாய்த்துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். மேலும், தேசிய நூலக வாரவிழாவையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து ராஜாராம்மோகன்ராய் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, நூலகர்கள் சாந்தி, பிரேமா, நூலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், வாசக வட்ட தலைவர் கமலேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடுவோரை காப்பாற்றுவோருக்கு மத்திய அரசு விருது அளிக்கும்.
    • உயிரைக் காப்பாற்றுவோருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சாா்பில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களது உயிரைக் காப்பாற்றுவோருக்கு பரிசுகள், பாராட்டு ச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. பரிசு, பாராட்டுச் சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்டோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்ற முதலுவி சிகிச்சை அளித்தல், பொன்னான நேரத்திற்குள் (கோல்டன்ஹவா்) மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தல் ஆகியவற்றின் மூலம் விருதுக்கு சம்பந்தப்பட்டோா் தகுதியானோராக கருதப்படுவாா்.

    விருதானது ஒரு சம்பவத்துக்கு ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றும் வழங்கப்படும். ஓராண்டில் ஒருவருக்கு 5 முறைகள் இந்த விருதுகள் வழங்கப்படலாம். விருதுக்கானவா்களை ஆண்டுதோறும் செப்டம்பருக்குள் மாநில அளவிலான கண்காணிப்புக்குழு, தேசிய அளவிலான விருதுகளுக்கு தகுதியான 3 பேரை பரிந்துரைக்கும்.

    அதனடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் தோ்வாகும் 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும். இந்தத் திட்டம் வரும் 2026 மாா்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஆகவே திட்டத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி, உயிரைக் காக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×